விளையாட்டு துறையை வலுப்படுத்த "Lion Warriors" என்ற குழு நியமனம்!
#SriLanka
#sports
Thamilini
1 year ago
2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்களை தயார்படுத்துவதற்கான பத்தாண்டு திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தை விளையாட்டு துறையில் உள்ள வல்லுநர்கள் குழு சமீபத்தில் தொடங்கியது.
இது "சிங்க வீரர்கள்" என்று அழைக்கப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியை குறிவைத்து பதக்கம் வெல்வதற்காக, விளையாட்டு வீரர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து, பயிற்சி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உலகின் பல நாடுகள் நீண்ட கால திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதன் அடிப்படையில்அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இலங்கை விளையாட்டுக்களுக்கு புது வாழ்வு அளிக்கும் நோக்கில், இலங்கையின் விளையாட்டுத் துறை வல்லுனர்கள் குழுவொன்று "Lion Warriors" என்ற நீண்ட கால திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.